×

கமுதியில் அந்தோணியார் ஆலய தேர் திருவிழா கொடி ஏற்றத்துடன் துவக்கம்

கமுதி, ஜூன் 4:கமுதியில் புனித அந்தோணியார் ஆலய தேர் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. கமுதி மெயின் பஜாரில் உள்ள புனித அந்தோணியார் ஆலயம் சுமார் 300 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த ஆலயமாகும். பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்தின் தேர் திருவிழா வருடந்தோறும் ஜூன் மாதம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த வருடதேர் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.

முன்னதாக ஏராளமான கிறிஸ்தவர்கள் புனித அந்தோணியார் உருவம் பொறித்த கொடியை ஏந்தி ஆலயத்தை வலம் வந்தனர். பின்னர் ஆலய வளாகத்தில் உள்ள கொடி மரத்தின் முன்பு, கமுதி பங்குத்தந்தை அமலன், திருப்பத்தூர் பங்குத் தந்தை அற்புத அரசு ஆகியோர் முன்னிலையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் ஜெப வழிபாடு நடத்தினர். அனைவரின் மீதும் புனித நீர் தெளிக்கப்பட்டு,வாணவேடிக்கை மேளதாளங்களுடன் கொடியேற்றப்பட்டது.

பின்னர் ஆலயத்தில் திருப்பலி நடைபெற்றது. வரும் 14-ம் தேதி வெள்ளிக் கிழமை புனித அந்தோணியார் தேர் பவனி நகர் முழுவதும் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 15-ம் தேதி அந்தோணியார் தெரு மற்றும் சவேரியார் தெருக்களில் தேர்ப்பவனி நடைபெற்று, 16ம் தேதி கர்த்தர் சுவாமி அசனம் நடைபெற உள்ளது. விழாவை முன்னிட்டு புனித அந்தோணியார் ஆலயம் மின்னொளி அலங்கார விளக்குகளால் ஜொலிப்புடன் காணப்பட்டு வருகிறது.

 

The post கமுதியில் அந்தோணியார் ஆலய தேர் திருவிழா கொடி ஏற்றத்துடன் துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Anthony's Chariot Festival ,Kamudi ,St. Anthony's Chariot Festival ,St. Anthony's Temple ,Kamudi Main Bazaar ,Antoniyar Temple Chariot Festival ,
× RELATED பொங்கல் விழாவில் முளைப்பாரி ஊர்வலம்