×

உசிலம்பட்டி அருகே மழையால் சேதமடைந்த பயிர்களை அதிகாரிகள் ஆய்வு

 

உசிலம்பட்டி, ஜூன் 4: உசிலம்பட்டி அருகே மழையால் சேதமடைந்த பயிர்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள குறவகுடி மற்றும் விண்ணகுடி கிராமத்தில் கடந்த இரண்டு நாட்களாக காற்றுடன் கனமழை பெய்தது. இதன் காரணமாக அப்பகுதியில் சுமார் 150 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கி சேதமடைந்தது.

இதில் சுமார் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனையடுத்து குறவகுடி மற்றும் விண்ணகுடி கிராமங்களில் வேளாண்மை உதவி அலுவலர் நாகராஜன், கிராம நிர்வாக அலுவலர் பத்மநாபன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் பாதிப்பு குறித்து விரிவான அறிக்கையை மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

The post உசிலம்பட்டி அருகே மழையால் சேதமடைந்த பயிர்களை அதிகாரிகள் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Usilampati ,Usilampatty ,Karawagudi ,Vinakudi ,Madurai ,Dinakaran ,
× RELATED 10,12ம் வகுப்பு தேர்வில் முதலிடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசு