×

பொள்ளாச்சி – கிணத்துக்கடவு ரயில் பாதை மதுரை கோட்டத்தில் இணைக்க கோரிக்கை

பழநி, ஜூன் 4: பொள்ளாச்சி – கிணத்துக்கடவு ரயில் பாதையை, மதுரை கோட்டத்துடன் இணைக்க வேண்டுமென ரயில் பயணிப்போர் நலச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பழநி ரயில் பயணிப்போர் நலச்சங்கத்தினர் ரயில்வே பொது மேலாளருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: கோவையில் இருந்து பொள்ளாச்சி, பழநி, திண்டுக்கல், திருச்சி வழியாக மயிலாடுதுறைக்கு முன்பதிவில்லாத ஒரு விரைவு வண்டி இயக்கப்பட வேண்டும்.

கோவையில் இருந்து ராமேஸ்வரம் மற்றும் திருச்செந்தூருக்கு பழநி வழித்தடத்தில் இரவு நேர ரயில் இயக்கப்பட வேண்டும். பொள்ளாச்சி – கிணத்துக்கடவு ரயில் பாதையை மீண்டும் மதுரை கோட்டத்துடன் இணைக்க வேண்டும். பழநியில் இருந்து திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர் வழியாக சென்னைக்கு இரவு நேர ரயில் இயக்க வேண்டும். கோவை – மதுரை மார்க்கத்தில் மீட்டர் கேஜ் காலத்தில் இயக்கப்பட்ட அனைத்து ரயில்களையும் மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

The post பொள்ளாச்சி – கிணத்துக்கடவு ரயில் பாதை மதுரை கோட்டத்தில் இணைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Pollachi ,Kinathukadavu ,Madurai ,Palani ,passengers' welfare association ,Madurai section ,Palani Railway Passengers' Welfare Association ,General Manager ,Coimbatore ,Kinathukkadavu ,Dinakaran ,
× RELATED கேரளாவிலிருந்து பொள்ளாச்சி...