×

புத்தளம் அருகே கொத்தனாரை தாக்கியவர் கைது

சுசீந்திரம், ஜூன் 4: புத்தளம் அருகே அரியபெருமாள்விளையை சேர்ந்தவர் சந்திர உதயம் (58). கொத்தனார். அவருக்கும் உத்தண்டன் குடியிருப்பு பகுதியை சேர்ந்த அரிகிருஷ்ணன் (45), அரியப்பெருமாள்விளையை சேர்ந்த மணிகண்டன் (37) ஆகியோருக்கும் இடையே சம்பளம் கொடுப்பதில் முன்விரோதம் ஏற்பட்டது. இந்தநிலையில் சந்திரஉதயம் சம்பவத்தன்று வீட்டின் முன்பு நின்று கொண்டிருக்கும் பொழுது அங்கு வந்த அரிகிருஷ்ணன், மணிகண்டன் ஆகியோர் சேர்ந்து சந்திர உதயத்தை கையாலும், கம்பியாலும் தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த சந்திர உதயம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து சந்திர உதயம் சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மகேஷ் அரிகிருஷ்ணன், மணிகண்டன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்தார். தொடர்ந்து அரிகிருஷ்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post புத்தளம் அருகே கொத்தனாரை தாக்கியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Puttalam ,Suchindram ,Chandra Udayam ,Ariyaperumalvilai ,Mason ,Arikrishnan ,Uthandan ,Manikandan ,Kothanar ,
× RELATED ஈர நிலத்துக்கான ராம்சார் பகுதியாக...