×

நாகர்கோவிலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில், ஜூன் 4: ரபா நகரத்தின் மீதான தாக்குதலை உடனே நிறுத்த வேண்டும். இஸ்ரேல் உடனே போர் நிறுத்தம் செய்ய வேண்டும். சுயேட்சையான பாலஸ்தீன நாட்டை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மோடி அரசு இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்வதை நிறுத்த வேண்டும். இஸ்ரேல் அரசின் இனப்படுகொலையை கண்டிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் வேப்பமூடு பூங்கா முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் செல்லசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் அகமது உசேன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

The post நாகர்கோவிலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Communist ,Nagercoil ,Raba town ,Israel ,Modi government ,Dinakaran ,
× RELATED மா.கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்