×

தலைக்காட்டுபுரத்தில் குடிநீர் தட்டுப்பாடு விளாத்திகுளம் யூனியன் ஆபிசை காலிகுடங்களுடன் மக்கள் முற்றுகை

எட்டயபுரம், ஜூன் 4: தலைக்காட்டுபுரத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து கிராம மக்கள், விளாத்திகுளம் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். எட்டயபுரம் தாலுகா தலைக்காட்டுபுரத்தில், கடந்த 10 தினங்களாக குடிநீர் விநியோகம் இல்லாமல் கிராம மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். குடிநீர் மின்மோட்டார் பழுதான நிலையில், இதுநாள் வரை சரி செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டும் கிராம மக்கள், ஊருக்கு குடிநீர் வேன் வரும் வரை காத்துக் கிடந்து விலை கொடுத்து தண்ணீர் வாங்க வேண்டி உள்ளதாகவும், இதனால் சரியான நேரத்திற்கு வேலைக்கு செல்ல முடியாமல் சிரமப்படுவதாகவும் புகார் கூறினர். இந்நிலையில் நேற்று தலைக்காட்டுபுரம் பஞ்சாயத்து தலைவர் பச்சைபெருமாள் தலைமையில் கிராம மக்கள், காலிகுடங்களுடன் திரண்டு சென்று விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

The post தலைக்காட்டுபுரத்தில் குடிநீர் தட்டுப்பாடு விளாத்திகுளம் யூனியன் ஆபிசை காலிகுடங்களுடன் மக்கள் முற்றுகை appeared first on Dinakaran.

Tags : Talaikatupuram Wralathikulam Union ,Etayapuram ,Vlathikulam Union ,Thalaikatupura ,Etayapuram Taluga Talaikatupura ,Talaikatupuram ,Drinking Water Tap ,Valitikulam Union ,
× RELATED மேலப்பாளையம் கால்நடை சந்தையில் பக்ரீத் பண்டிகைக்காக ஆடுகள் குவிந்தன