×

கிண்டல் செய்ததை தட்டிக்கேட்ட வாலிபரை சரமாரியாக வெட்டிய இருவர் கைது

கடையம், ஜூன் 4: ஆழ்வார்குறிச்சி அருகே கிண்டல் செய்ததை தட்டிக்கேட்ட வாலிபரை அரிவாளால் சரமாரியாக வெட்டிய இருவரை போலீசார் கைது செய்தனர். நெல்லை மாவட்டம், வீரவநல்லூரை பூர்விகமாக கொண்டவர் ஆறுமுகம். தற்போது கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக ஆழ்வார்குறிச்சி அருகேயுள்ள அடைச்சாணி மேலத் தெருவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இதனிடையே அவரது மகன் கதிர் (19) என்பவரை, அதே பகுதியைச் சேர்ந்த பெரியசாமியின் மகன் பாபநாசம் (32), கடற்கரையின் மகன் செல்வம் (30) ஆகியோர் கிண்டல் செய்தனராம். இதையடுத்து இதை கதிர் தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த பாபநாசம், செல்வம் ஆகிய இருவரும் கதிரை அவதூறாகப் பேசியதோடு சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் காயமடைந்த கதிரை, உறவினர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவுசெய்த ஆழ்வார்குறிச்சி போலீசார், அரிவாளால் வெட்டிய செல்வம், பாபநாசம் ஆகிய இருவரையும் கைதுசெய்தனர்.

The post கிண்டல் செய்ததை தட்டிக்கேட்ட வாலிபரை சரமாரியாக வெட்டிய இருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Khadayam ,Alwarkurichi ,Arumugam ,Veeravanallur, Nellai district ,Adachani ,
× RELATED கடையம் சார்பதிவாளரின் வீட்டில் விஜிலென்ஸ் ரெய்டு