×

தமிழ் உள்ளவரை கலைஞர் சாதனைகள் நிலைத்திருக்கும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்து

சென்னை: திமுக இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது: திராவிட இயக்கத்தின் தலைமைச் செயலகமாக அரை நூற்றாண்டுக்கும் மேல் தமிழ்நாட்டு அரசியலின் திசையைத் தீர்மானித்த கோபாலபுரம் இல்லத்தில் நூற்றாண்டு நாயகர் கலைஞரின் திருவுருவப் படத்திற்கு அவரது பிறந்த நாளான இன்று திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலினோடு மலர் தூவி மரியாதை செலுத்தினோம். தலைவர்களுக்கெல்லாம் தலைவராக, முதல்வர்களுக்கெல்லாம் முதல்வராக முன்னின்று ‘ஓய்வறியாச் சூரியனாய்’ அவர் படைத்த சாதனைகள் தமிழ் உள்ளவரை நிலைத்திருக்கும்! இவ்வாறு பதிவிட்டுள்ளார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றொரு பதிவில், ‘அண்ணா வழியில் அயராது உழைப்போம்’ என்று முத்தமிழறிஞர் கலைஞர் நமக்கு வழங்கிய முழக்கத்தை மனதிலேந்தி அவர் வழிநின்று செயலாற்றுவோம்” என்றும் தெரிவித்துள்ளார்.

The post தமிழ் உள்ளவரை கலைஞர் சாதனைகள் நிலைத்திருக்கும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்து appeared first on Dinakaran.

Tags : Minister ,Udayanidhi Stalin ,Chennai ,DMK ,Udhayanidhi Stalin ,Dravidian movement ,Tamil Nadu ,Gopalapuram ,
× RELATED தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை வெளியீடு..!!