×

தெற்கு ரயில்வே முதன்மை தலைமை வணிக மேலாளர் பொறுப்பேற்பு

சென்னை: தெற்கு ரயில்வேயின் முதன்மை தலைமை வணிக மேலாளராக கே. பெஜி ஜார்ஜ் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கு முன், ரயில்வே வாரிய இயக்குநர் (திட்டமிடல்), இந்திய சரக்கு பெட்டக கழகத்தின் மூத்த பொது மேலாளர், ரயில்வே தகவல் அமைப்புக்கான மையத்தின் பொது மேலாளர் மற்றும் முதன்மை கண்காணிப்பு அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார். மேலும், ரயில்வே துறையின் சிறப்புமிக்க பணிகளுக்காக கவுரவம் மிக்க ரயில்வே அமைச்சர் விருது, ரயில்வே வாரியம் மற்றும் பொது மேலாளர் விருது ஆகியவற்றையும் பெஜி ஜார்ஜ் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post தெற்கு ரயில்வே முதன்மை தலைமை வணிக மேலாளர் பொறுப்பேற்பு appeared first on Dinakaran.

Tags : Southern Railway ,CHENNAI ,K. Beji George ,Railway Board ,Indian Freight Corporation ,Center for Railway Information System… ,Dinakaran ,
× RELATED ஜூலை 1 முதல் ரயில்களின் நம்பர்கள்...