×

தமிழர்களே..! தமிழர்களே..!: கலைஞர் மேடையில் பேசிய வீடியோ வைரல்

சென்னை: கலைஞரின் 101வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக சார்பில் வெளியிடப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. முன்னாள் முதல்வர் கலைஞரின் 101-வது பிறந்த நாளான இன்று அவருக்கு, அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து புகழாரம் சூட்டியுள்ளனர். இந்நிலையில், திமுக சார்பில் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழா தொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் இன்று வீடியோ ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது.

அதில் கலைஞர் மேடையில் பேசிய புகழ்பெற்ற வசனமான, “தமிழர்களே…தமிழர்களே..நான் தயாரிக்கப்பட்டவன்-பெரியாரால் தட்டி தட்டி சீர்செய்யப்பட்டவன்-அறிஞர் அண்ணா அவர்களால் நான் வலுப்பெற்றவன்- என்னுடைய கழக கண்மணிகளால்..”. “ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில்… அவன் உயர் சாதிக்கு மட்டும் தங்கத்தால் மூளை செய்து தலைக்குளே வைத்தானா? மற்ற சாதிக்கெல்லாம் மண்டைக்குள் இருப்பதென்ன களிமண்ணா?… சுண்ணாம்பா?…” “இது உங்கள் பிறந்தநாள் மட்டுமல்ல… உயிரினும் மேலான உங்களின் கோடிக்கணக்கான உடன்பிறப்புக்கள் அனைவரும் புத்துணர்ச்சி பெற்ற நாள்…,” உள்ளிட்ட காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதன் பின்னணியில் தமிழ்த் திரைப்பட பாடல்கள் கோர்வையாக இணைக்கப்பட்டு உள்ளன. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

 

The post தமிழர்களே..! தமிழர்களே..!: கலைஞர் மேடையில் பேசிய வீடியோ வைரல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,DMK ,chief minister ,
× RELATED மக்கள் நம்பிக்கை வைத்து...