×

தமிழ் மக்களின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர் கலைஞர்: பிரதமர் மோடி புகழாரம்

சென்னை: கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்தி உள்ளார். இதுதொடர்பாக அவரது பதிவு: கலைஞர் கருணாநிதியின் 100வது பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். நீண்ட காலம் பொது வாழ்வில் இருந்த அவர், தமிழ்நாடு மற்றும் தமிழ் மக்களின் வளர்ச்சிக்காக பாடுபட்டார். அவர் தனது அறிவார்ந்த இயல்புக்காக பரவலாக மதிக்கப்படுகிறார். நாங்கள் இருவரும் அந்தந்த மாநிலங்களில் முதலமைச்சராக இருந்தபோதும், அவருடன் நான் நடத்திய பல உரையாடல்களை நான் அன்புடன் நினைவுகூர்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

தொலைநோக்கு பார்வை கொண்டவர்: பீகார் முன்னாள் துணை முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேஜஸ்வியாதவ் கூறுகையில்,’தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாளில் அவருக்கு நெஞ்சார்ந்த அஞ்சலிகள். அரசுத் திட்டங்களில் சமூக நீதியை ஒருங்கிணைத்து, சமூகத்தின் உரிமையற்ற பிரிவினரை உயர்த்த அயராது உழைத்தவர். தமிழ்நாட்டில் கல்வி முன்னேற்றம் மற்றும் தொழில்நுட்ப ஒருங்கிணைப்புக்கு அடித்தளமிட்ட தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

 

The post தமிழ் மக்களின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர் கலைஞர்: பிரதமர் மோடி புகழாரம் appeared first on Dinakaran.

Tags : Modi ,Chennai ,Karunanidhi ,Tamil Nadu ,
× RELATED வரும் 20ம் தேதி சென்னை வரும் பிரதமர்...