×

வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்கள், உதவியாளர்களை இரண்டாம் கட்டமாக தேர்வு செய்யும் பணி தேர்தல் அலுவலர் தலைமையில் நடைபெற்றது

சென்னை: நாடாளுமன்ற பொதுத் தேர்தல் 2024ற்கான சென்னையில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் பணிபுரியவுள்ள வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள் மற்றும் நுண் பார்வையாளர்களை இரண்டாம் கட்டமாக சட்டமன்றத் தொகுதி வாரியாக கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் பணி மாவட்ட தேர்தல் அலுவலர்/கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், தலைமையில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை பார்வையாளர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் இன்று (03.06.2024) ரிப்பன் கட்டட வளாக அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது.

பின்னர் மாவட்ட தேர்தல் அலுவலர்/கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் தெரிவித்ததாவது: தமிழ்நாட்டில் கடந்த 19.04.2024 அன்று நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, 04.06.2024 அன்று நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கையினை முன்னிட்டு, சென்னையில் உள்ள தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதி-அண்ணா பல்கலைக்கழக வாக்கு எண்ணும் மையம், மத்தியசென்னை நாடாளுமன்றத் தொகுதி-லயோலா கல்லூரி வாக்கு எண்ணும் மையம் மற்றும் வடசென்னை நாடாளுமன்றத் தொகுதி- இராணி மேரி கல்லூரி வாக்கு எண்ணும் மையங்களில் நடைபெறும் வாக்கு எண்ணிக்கை பணியினை மேற்கொள்ளவுள்ள மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள் மற்றும் நுண் பார்வையாளர்கள் முதற்கட்டமாக நாடாளுமன்றத் தொகுதி வாரியாக தேர்வு செய்யும் பணி கடந்த 27.05.2024 அன்று நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக சட்டமன்றத் தொகுதி வாரியாக மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள் மற்றும் நுண் பார்வையாளர்களை கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் பணி தேர்தல் வாக்கு எண்ணிக்கை பார்வையாளர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் இன்று (03.06.2024) நடைபெற்றது.

மூன்றாம் கட்டமாக மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள் மற்றும் நுண் பார்வையாளர்களை வாக்கு எண்ணிக்கை மேசைகள் வாரியாக குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் பணி நாளை (04.06.2024) தேர்தல் வாக்கு எண்ணிக்கை பார்வையாளர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள்/உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் காலை 5.00 மணிக்கு நடைபெறும்.

வாக்கு எண்ணிக்கையில் முன்னிருப்பு 20% உட்பட வடசென்னையில் 357 நபர்கள், தென்சென்னையில் 374 நபர்கள், மத்திய சென்னையில் 380 நபர்கள் மற்றும் 322 அலுவலக உதவியாளர்கள் என மொத்தம் 1433 பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் பணிபுரியவுள்ளனர்.

வாக்கு எண்ணும் மையங்களில் பணிபுரியவுள்ள வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள் மற்றும் நுண் பார்வையாளர்களுக்கான முதற்கட்ட பயிற்சி 29.05.2024 அன்று நடத்தப்பட்டது. தொடர்ச்சியாக, இன்று (03.06.2024) இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் முழுமையாக பின்பற்றப்பட்டு வாக்கு எண்ணும் பணிகள் நடைபெறும்.

இந்நிகழ்ச்சியில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை பார்வையாளர்கள் டாக்டர் டி. சுரேஷ், (Dr. D. Suresh, I.A.S.,), கார்த்திகே தன்ஜி புத்தப்பாட்டி, (Mr.Kartikay Dhanji Budhdhabhatti, I.A.S.,), முத்தாடா ரவிச்சந்திரா, (Mr. Muddada Ravichandra, I.A.S.,), ராஜேஷ் குமார், எஸ்.சி.எஸ்., (Mr. Rajesh Kumar, SCS.,), ஜிதேந்திரா ககுஸ்தே, எஸ்.சி.எஸ்., (Mr. Jitendra Kakuste, SCS.,), முகமது சஃபிக் சக், எஸ்.சி.எஸ்., (Mr. Mohammed Slafiq Chak, SCS.,), கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் ரஷ்மி சித்தார்த் ஜகடே, (சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர்), ஆர். லலிதா, (கூடுதல் ஆணையாளர் (வருவாய் (ம) நிதி), டாக்டர் வி. ஜெய சந்திர பானு ரெட்டி, (கூடுதல் ஆணையாளர் (சுகாதாரம்)), டாக்டர் ஜி. எஸ். சமீரன், (இணை ஆணையாளர் (பணிகள்)), ஷரண்யா அறி, (துணை ஆணையாளர் (கல்வி)), தேர்தல் நடத்தும் அலுவலர்கள்/வட்டார துணை ஆணையாளர்கள் எம்.பி.அமித், (தெற்கு), கே.ஜெ.பிரவீன் குமார், (மத்தியம்), கட்டா ரவி தேஜா, (வடக்கு) மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்கள், உதவியாளர்களை இரண்டாம் கட்டமாக தேர்வு செய்யும் பணி தேர்தல் அலுவலர் தலைமையில் நடைபெற்றது appeared first on Dinakaran.

Tags : Chennai ,General Election 2024 ,Assembly Constituency ,
× RELATED விக்கிரவாண்டி சட்டப்பேரவைத்...