×

கடைசி சுற்றுக்கு முன் தபால் வாக்கு விவரங்கள் வெளியிடப்படும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை: வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளின் கடைசி சுற்றுக்கு முன் தபால் வாக்கு எண்ணிக்கை விவரங்கள் வெளியாகும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு விளக்கம் அளித்துள்ளார். “தபால் வாக்குகள் முதலில் எண்ணப்படும், பல்வேறு மாநிலங்களில் இருந்து பொதுப் பார்வையாளர்கள் தமிழகம் வந்துள்ளனர்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு, “தபால் வாக்குகள் முதலில் எண்ணப்படும், பல்வேறு மாநிலங்களில் இருந்து பொதுப் பார்வையாளர்கள் தமிழகம் வந்துள்ளனர். வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளின் கடைசி சுற்றுக்கு முன் தபால் வாக்கு எண்ணிக்கை விவரங்கள் வெளியாகும்.

ஒவ்வொரு சுற்றுக்கும் வாக்கு எண்ணிக்கை குறித்து அரசியல் பிரமுகர்களுக்கு தெரிவிக்கப்படும். வாக்கு எண்ணும் மையங்களில் எந்தவிதமான பிரச்னைகளும், ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து கண்காணிக்கப்படும். வாக்கு எண்ணும் மையத்திற்குள், பத்திரிகையாளர்களுக்கு தொலைபேசி உபயோகிக்க அனுமதி கிடையாது.” என்றார்.

இதேபோல் வாக்கு எண்ணிக்கையின்போது தபால் வாக்குகள் முதலில் எண்ணத் தொடங்கப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் உறுதி அளித்துள்ளார். தபால் வாக்குகளை எண்ணத் தொடங்கி 30 நிமிடங்களுக்கு பிறகே, EVM வாக்குகள் எண்ணப்படும் என அவர் கூறியுள்ளார்.

தேர்தல் ஆணைய விதிகளின் படி முதலில் தபால் வாக்குகளை எண்ண வேண்டும். இதற்கிடையே தபால் வாக்குகள் இறுதியாக எண்ணப்படும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்ததாகக் கூறப்படும் நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூவிடம் கடந்த வாரம் மனு அளித்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

 

 

The post கடைசி சுற்றுக்கு முன் தபால் வாக்கு விவரங்கள் வெளியிடப்படும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chief Electoral Officer ,CHENNAI ,Tamil ,Nadu ,Sathyapradashaku ,Dinakaran ,
× RELATED விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான...