×

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான நட்சத்திர பேச்சாளர் பட்டியலை 21ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்: தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு

சென்னை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்யும்போது, விமானம் உள்ளிட்ட போக்குவரத்து செலவுகள் கட்சியின் வேட்பாளர் மற்றும் முகவர்கள் கணக்கில் சேராது. இந்த சலுகையை பெற, அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் 40 பேரின் பெயர் பட்டியலையும், பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சிகள் 20 பேரின் பெயர் பட்டியலையும் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்ப வேண்டும்.

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் அறிவிக்கை 14ம் தேதி (நாளை) வெளியிடப்பட உள்ளது. செலவு தொகையில் இருந்து விலக்கு பெற விரும்பும் கட்சிகள் தங்கள் கட்சியின் சார்பில் பிரசாரம் செய்யும் தலைவர்களின் பெயர் பட்டியலை தெரிவித்து இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரிக்கு 21.06.2024-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த பட்டியலில் உள்ளவர்களின் பயணச் செலவுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படும். இதுதவிர மற்ற செலவினங்கள் அனைத்தும் வேட்பாளரின் செலவு கணக்கில் சேர்க்கப்படும். அதேநேரம், வேட்பாளருக்கு வேறு கட்சியின் நட்சத்திர தலைவர் பிரசாரம் செய்தால், அதில் விலக்கு கோர இயலாது.

The post விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான நட்சத்திர பேச்சாளர் பட்டியலை 21ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்: தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Vikravandi ,Electoral ,Chennai ,Chief Electoral Officer ,Tamil Nadu ,Sathyaprada Sahu ,Dinakaran ,
× RELATED விக்கிரவாண்டி சட்டமன்ற...