×

எஸ்பி அலுவலக பணியின்போது துப்பாக்கியால் சுட்டு பெண் போலீஸ் தற்கொலை: காதல் திருமணம் செய்து கொண்டவர்

திருமலை: ஆந்திர மாநிலம், அன்னமய்யா மாவட்டம், மதனப்பள்ளியைச் சேர்ந்தவர் தஸ்தகிரி. இவர் புங்கனூர் போலீஸ் அகடமியில் காவலர் பயிற்றுனராக பணி புரிந்து வருகிறார். இதே பயிற்சி மையத்தில் புங்கனூர் அடுத்த பன்கனப்பள்ளியை சேர்ந்த வேதவதி(26) என்பவர் போலீசாக தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சி பெற்று வந்தார். அப்போது வேதவதிக்கும், தஸ்தகிரிக்கும் ஏற்பட்ட நட்பு காதலாக மாறியது. இருவரும் காதலித்த நிலையில் கடந்த 2016ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

அதன்பின்னர் சித்தூரில் கான்ஸ்டபிளாக பணிபுரிந்து வந்த வேதவதி, ஓராண்டுக்கு முன், அன்னமையா மாவட்ட போலீஸ் அலுவலகத்துக்கு மாறுதலாகி வந்தார். தற்போது ​​ராயசோட்டி நகரில் உள்ள ராஜீவ்காந்தி குடியிருப்பு அருகே உள்ள இந்திரம்மா காலனியில் தஸ்தகிரியுடன் வேதவதி வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று வழக்கம் போல் வேதவதி ராயசோட்டியில் உள்ள எஸ்.பி. அலுவலக பணியில் இருந்தார். மதியம் அலுவலகத்தில் திடீரென துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது.

இதனால் அங்கிருந்த சக போலீசார் சத்தம் கேட்ட பகுதிக்கு சென்று பார்த்தனர். அப்போது வேதவதி ரத்த வெள்ளத்தில் குண்டு பாய்ந்து இறந்து கிடந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் அவரது உடலை மீட்டு ராயசோட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து குடும்ப தகராறில் வேதவதி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது துப்பாக்கி தவறுதலாக சுட்டு கொண்டதா? என விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The post எஸ்பி அலுவலக பணியின்போது துப்பாக்கியால் சுட்டு பெண் போலீஸ் தற்கொலை: காதல் திருமணம் செய்து கொண்டவர் appeared first on Dinakaran.

Tags : Tirumala ,Dastagiri ,Madanapalli, Annamayya District, Andhra Pradesh ,Bunganur Police Academy ,Vedavati ,Pankanapally ,Punkanur ,
× RELATED திருப்பதி தேவஸ்தானத்துக்கு புதிய செயல் அதிகாரி நியமனம்