×

வைகுண்டம் அருகே டிராக்டர் கவிழ்ந்ததில் கிளீனர் பரிதாப பலி

 

வைகுண்டம், ஜூன் 2: வைகுண்டம் அருகே டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கிளீனர் இறந்தார். டிரைவர் படுகாயம் அடைந்தார். வைகுண்டம் முன்னீர் காலனியைச் சேர்ந்தவர் மந்திரம் (62). தண்ணீர் டிராக்டரில் டிரைவராக உள்ளார். அதே கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் (65) என்பவர் கிளீனராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு வைகுண்டம் அருகே தெற்கு தோழப்பன்பண்ணையில் உள்ள தோட்டத்திற்கு தண்ணீர் ஊற்ற டிராக்டரில் இருவரும் சென்றுள்ளனர்.

அப்போது பத்மநாபமங்கலம் செல்லும் சாலையிலிருந்து தெற்கு தோழப்பன்பண்ணைக்கு செல்ல டிராக்டரை திருப்பியபோது எதிர்பாராத விதமாக பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயம் அடைந்த கிளீனர் ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். இடிபாடுகளுக்கிடையே சிக்கி படுகாயமடைந்த டிரைவர் மந்திரத்தை அக்கம்பக்கத்தினர் மீட்டு வைகுண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து வைகுண்டம் இன்ஸ்பெக்டர் பத்மநாபபிள்ளை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

The post வைகுண்டம் அருகே டிராக்டர் கவிழ்ந்ததில் கிளீனர் பரிதாப பலி appeared first on Dinakaran.

Tags : Vaikundam ,Mantram ,Munneer Colony, Vaikundam ,Arumugam ,
× RELATED வைகுண்டத்தில் காற்றுடன் மழை