×

ராசிபுரத்தில் ஆசிரியர்களுக்கு பிரிவுபசார விழா

 

 

ராசிபுரம், ஜூன் 3: ராசிபுரம் அருகே சந்திரசேகரபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில், பட்டதாரி ஆசிரியர்களாக பணியாற்றி, இந்தாண்டில் பணி ஓய்வு பெறும் நல்லாசிரியர் லோகநாதன், திருமறைமணி ஆகியோருக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில், ஆசிரியர்களுக்கு மாலை அணிவித்து நினைவு பரிசு வழங்கி, பள்ளியின் தலைமை ஆசிரியர் (பொ) கவிதா மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், அலுவலகப் பணியாளர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் முத்துச்செல்வன், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் கீதா, பெற்றோர் ஆசிரியர் கழக முன்னாள் தலைவர் குமார், கல்வி ஆர்வலர் பெருமாள், தன்னார்வலர் பேபி, இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர் திவ்யபாரதி, மேகலா ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post ராசிபுரத்தில் ஆசிரியர்களுக்கு பிரிவுபசார விழா appeared first on Dinakaran.

Tags : Rasipuram ,Chandrasekharapuram ,Government High School ,Lokanathan ,Thirukaimani ,Bihghanpasara ceremony ,
× RELATED விவசாயி பையில் கொண்டு சென்ற ரூ.500...