×

காரைக்கால் அருகே குடிபோதையில் ரகளை 2 பேர் கைது

 

காரைக்கால், ஜூன் 3: காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரியில், பொது இடத்தில் மது போதையில் ஆபாசமாக பேசிய இருவரை கோட்டுச்சேரி போலீசார் கைது செய்தனர். காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் உத்தரவின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் ராஜகணபதி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் கோட்டுச்சேரி காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ரோது பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்பொழுது மாரியம்மன் கோவில் வீதி அருகே இருவர் மது போதையில் ஆபாசமாக பேசிக் கொண்டிருந்தது தெரிய வந்தது.இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் புகார் அளித்ததின் பேரில், போலீசார் அந்த இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், காரைக்கால் மேட்டை சேர்ந்த சுனில் ரோகி (23), நாகை மாவட்டம் தரங்கம்பாடியை சேர்ந்த நித்தியானந்தம் (23) ஆகிய இருவர் என்பதும் தெரிய வந்தது.தொடர்ந்து இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post காரைக்கால் அருகே குடிபோதையில் ரகளை 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Ragala ,Karaikal ,Kottucheri ,Inspector ,Sentilkumar ,Sub-Inspector ,Rajaganapathi ,Dinakaran ,
× RELATED காரைக்காலில் வரும் 21ம் தேதி உள்ளூர் விடுமுறை!!