×

வரதட்சணை கொடுமை 3 பேர் மீது வழக்குப்பதிவு

 

சாத்தூர், ஜூன் 3: சாத்தூர் அருகே பெரியகொல்லபட்டியை சேர்ந்தவர் நாகலட்சுமி(27). இவருக்கு சென்னை கோவூர்வரிவாத்தல் வெங்கடேஸ்வரநகரை சேர்ந்த பிரதீப் என்பருடன் கடந்த பிப்ரவரி 2023ம் வருடம் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது நாகலட்சுமி குடும்பத்தினர் 32 பவுன் தங்க நகை, ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள வீட்டுப் பொருட்கள், ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளிப் பொருட்கள் வழங்கினர்.

சிறிது நாட்கள் கழித்து கணவர் வீட்டில் கார் கேட்டுள்ளனர். இதன்பிறகு ரூ.15 லட்சம் மதிப்பில் கார் வாங்கி கொடுத்துள்ளனர். கடந்த மாதம் கூடுதலாக ரூ.5 லட்சம் வாங்கி வரும்படி கணவர் பிரதீப் மற்றும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து சாத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நாகலட்சுமி புகார் அளித்தார். இதன்பேரில், கணவர் பிரதீப், அவரது தோழி சுகந்தி, மாமியார் வளர்மதி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வரதட்சணை கொடுமை 3 பேர் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Chatur ,Nagalakshmi ,Periyakollapatti ,Pradeep ,Govurvarivatal Venkateswara Nagar, ,Chennai ,
× RELATED சாத்தூர் அருகே அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 5 பேர் கைது