×

முன்னாள் ராணுவ வீரர் நலச்சங்க ஆலோசனை கூட்டம்

 

உடுமலை, ஜூன் 3: உடுமலையில் முன்னாள் ராணுவ வீரர் நலச்சங்க ஆலோசனை கூட்டம் லெப்டினென்ட் சுபாஷ் ரேணுகாதேவி அறக்கட்டளை வளாகத்தில் உள்ள முன்னாள் ராணுவ வீரர் நலச்சங்க அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு தலைவர் ராமலிங்கம் தலைமை வகித்தார். பொருளாளர் சிவகுமார் நாயப் சுபேதார் நடராஜ், உலகநாதன் லியாகத் அலிகான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சங்க உறுப்பினர்களின் குறை நிறைகளை பற்றி விவாதிக்கப்பட்டது.

உறுப்பினர்களின் பணிக்கால ஆவணங்கள் சரி செய்து கொள்ள ஆலோசனை வழங்கப்பட்டது. முன்னாள் ராணுவ வீரர்கள் ஈசிஹெச்-ல் மருத்துவ உதவி கள்முறைப்படி பெறுவது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. மரணமடையும் முன்னாள் ராணுவ வீரட்களின் உடலுக்கு இறுதி அஞ்சலி மற்றும் ராணுவ மரியாதை செலுத்தும் நிகழ்வில் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

மேலும் முப்படையில் மாணவர்களை சேர்ப்பதற்கு அவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கான ஏற்பாடு குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் முன்னாள் ராணுவ வீரர் நலச்சங்க உறுப்பினர்கள் சரவணன், முத்து காளை, அழகிரிசாமி, செல்வம், கருப்புசாமி ஆகியோர் உட்பட ராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக முன்னாள் ராணுவ வீரர் மோகன் நன்றி கூறினார்.

The post முன்னாள் ராணுவ வீரர் நலச்சங்க ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Ex-Serviceman Welfare Association Advisory ,Udumalai ,Ex-Servicemen ,Welfare Association ,Ex-Servicemen's Welfare Association ,Lt. ,Subhash Renukadevi Foundation ,Complex ,President ,Ramalingam ,Treasurer ,Sivakumar ,Ex-Serviceman Welfare Association ,Dinakaran ,
× RELATED மலைவாழ் குழந்தைகளுக்கு உதவி