×

சிவகங்கையில் செயல்படும் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் மாணவியர் சேர்க்கை கலந்தாய்வு: ஜூன் 10 முதல் தொடக்கம்

 

சிவகங்கை, ஜூன் 3:சிவகங்கை அரசு மகளிர் கலைக் கல்லூரியில், 2024-2025ம் கல்வியாண்டில் பொது பிரிவினருக்கான மாணவியர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெற உள்ளது. இளநிலை பட்டப் படிப்புகளுக்கான மாணவியர் சேர்க்கை குறித்து கல்லூரி முதல்வர் சுடர்க்கொடி கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை: சிவகங்கை அரசு கலைக்கல்லூரியில் ஜூன் 10ம் தேதி இயற்பியல், வேதியியல், கணிதம், கணினி அறிவியல், தாவரவியல், விலங்கியல், மனையியல் ஆகிய இளங்கலை பட்டப்படிப்புகளுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது.

ஜூன் 11ம் தேதி கலைப்பாடப் பிரிவுகளான வணிகவியல், பிபிஏ, வரலாறு, பொருளியல். ஜூன் 12ம் தேதி தமிழ் மற்றும் ஆங்கிலம் பாடப் பிரிவுகளுக்கும் மாணவியர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறும். கலந்தாய்வில் பங்கு பெறுவோர் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பம், பள்ளி மாற்றுச் சான்றிதழ், 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், சாதிச் சான்றிதழ்,

வங்கிக் கணக்கு புத்தகம், ஆதார் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களின் அசல் மற்றும் மூன்று நகல்களை கண்டிப்பாக எடுத்து வர வேண்டும். தரவரிசை பட்டியல் மற்றும் கலந்தாய்வு தேதி குறித்த விபரங்களை https://gacwsuga.edu.in/ என்ற இணைய தளத்தில் மாணவியர் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post சிவகங்கையில் செயல்படும் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் மாணவியர் சேர்க்கை கலந்தாய்வு: ஜூன் 10 முதல் தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Sivagangai Government Women's Arts College ,Sivagangai ,College Principal ,Sudarkodi Kannan ,
× RELATED கொலை வழக்கில் கைதான நான்கு பேருக்கு குண்டாஸ்