×

கடலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரே ஆற்றில் கார் கவிழ்ந்து விபத்து

 

ரெட்டிச்சாவடி, ஜூன் 3: கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே பெண்ணை ஆற்றில் கார் கவிழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.  கள்ளக்குறிச்சியை சேர்ந்த சிவபாலன்(35), சுந்தர் (37) உள்பட 5 பேர் காரில் நேற்று முன்தினம் கடலூர் செம்மண்டலம் பகுதியில் நடந்த ஒரு துக்க நிகழ்ச்சிக்காக வந்தனர். பின்னர் இரவு கடலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே தென்பெண்ணை ஆற்று தரைப்பாலத்தின் வழியாக புதுச்சேரி பகுதியான கொமந்தான்மேடு கிராமத்துக்கு சென்றனர்.

ஏற்கனவே அங்குள்ள ஆற்று பாலத்தில் உடைப்பு ஏற்பட்டு எச்சரிக்கை பலகைகள் இல்லாமல் இருந்த நிலையில் அவ்வழியாகச் சென்ற கார், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென்று ஆற்றுக்குள் பாய்ந்தது. இதையடுத்து காரில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர். இவர்களது சத்தம் கேட்டதும் அருகில் இருந்தவர்கள் அங்கு வந்து காரில் இருந்த 5 பேரையும் காயங்களுடன் மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

சிறிது நேரத்தில் கார் முழுவதும் தண்ணீரில் மூழ்கியது. இது குறித்து தகவல் அறிந்த பாகூர் மற்றும் ரெட்டிச்சாவடி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இரவு நேரம் என்பதால் ஆற்றில் மூழ்கிய காரை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து நேற்று காலை கிரேன் மூலம் ஆற்றில் மூழ்கிய காரை போலீசார் மீட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post கடலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரே ஆற்றில் கார் கவிழ்ந்து விபத்து appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Redtichavadi ,Panna river ,Cuddalore District Collectorate ,Sivapalan ,Sundar ,Kallakurichi ,Semmandalam ,
× RELATED தொழிலாளி மர்ம சாவு