×

உசிலம்பட்டி அருகே பட்டாசு வெடித்ததில் 8 பேர் காயம்

 

உசிலம்பட்டி, ஜூன் 3:உசிலம்பட்டி பகுதியில் பட்டாசு வெடித்து விபத்து அவ்வப்போது நடந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் நேற்று உசிலம்பட்டி அருகே கல்லூத்து கிராமத்தைச் சேர்ந்த பிரபுநாதன் என்பவரின் இல்ல விழா, மெய்யணம்பட்டி அருகே தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த விழாவிற்காக அன்னம்பாரிபட்டியில் இருந்து தாய் மாமனான வைரமுத்து என்பவரது தலைமையில் பட்டாசு வெடித்த வண்ணம் ஊர்வலமாக மண்டபத்திற்கு சென்றுள்ளனர்.

வத்தலகுண்டு ரோட்டில் கருப்புக் கோவில் அருகே ஊர்வலம் சென்றபோது, பட்டாசு ஊர்வலத்திற்குள் வெடித்ததில் ஊர்வலத்தில் வந்த இரு சிறுமிகள் உள்பட சத்யா, செல்வி, நித்யா, சானியா, பூங்கனி, வைரசிலை ஆகிய 8 பேர் படுகாயமடைந்தனர். உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தாய்மாமன் ஊர்வலத்தில் பட்டாசு வெடித்தவுடன் பெண்கள் பதறி ஓடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார், இல்ல விழா நடத்தியவர்கள், பட்டாசு வெடித்தவர்கள் என 10க்கும் மேற்பட்டோரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post உசிலம்பட்டி அருகே பட்டாசு வெடித்ததில் 8 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Usilambatti ,Usilampatti ,Prabhunathan ,Kalloothu village ,Meiyanambatti ,Dinakaran ,
× RELATED உசிலம்பட்டி போக்குவரத்து பணிமனை முன்பு சிஐடியூ விளக்க வாயிற் கூட்டம்