×

மாநில பெண்கள் கபடி போட்டி ஒட்டன்சத்திரம் அணி முதலிடம்

 

திண்டுக்கல், ஜூன் 3: திண்டுக்கல்லில் நடைபெற்ற மாநில அளவிலான பெண்கள் கபடி போட்டியில் ஒட்டன்சத்திரம் அணி முதலிடம் பிடித்து கோப்பை கைப்பற்றியது. திண்டுக்கல் மேட்டுப்பட்டி இளங்கதிர் அகாடமி சார்பில் 37ம் ஆண்டு மாநில அளவிலான பெண்கள் மத நல்லிணக்க கபடி போட்டி நடைபெற்றது. இதில் மாநில முழுவதும் இருந்து 25 அணிகள் கலந்து கொண்டன. நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஒட்டன்சத்திரம் அணி, மதுரை அணியை வென்று முதல் இடம் பிடித்தது.

பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவிற்கு, இளங்கதிர் அகாடமி நிர்வாகிகள் சவரி, ஆரோக்கியராஜ், யாகமுத்து, முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமை வகித்து வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில், நாட்டாமை காஜாமைதீன், லயன்ஸ் சங்க நிர்வாகி திபூர்சியஸ், முன்னாள் மேயர் மருதராஜ் வாழ்த்தி பேசினர்.

முதலிடம் பிடித்த ஒட்டன்சத்திரம் எஸ்.எம்.வி.கே.சி. அணிக்கு கோப்பை மற்றும் பரிசு ரூ.20,000, இரண்டாம் இடம் பிடித்த மதுரை மணி வாட்டர் அணிக்கு கோப்பை மற்றும் ரூ.15,000, மூன்றாம் இடம் பிடித்த நாமக்கல் மாஸ்டர் அணிக்கு கோப்பை மற்றும் ரூ.10,000, நான்காம் இடம் பிடித்த மதுரை வெற்றி திருமகள் அணிக்கு கோப்பை மற்றும் ரூ.10,000 பரிசாக வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை இளங்கதிர் கபடி அகாடமி நிர்வாகிகள் செய்திருந்தனர்.

The post மாநில பெண்கள் கபடி போட்டி ஒட்டன்சத்திரம் அணி முதலிடம் appeared first on Dinakaran.

Tags : State Women's Kabaddi Tournament Othanchatram ,Dindigul ,Ottanchatram ,women's kabaddi ,Mettupatti Ilangadir Academy ,State ,Level Women's Religious Reconciliation Kabaddi ,State Women's Kabaddi Tournament Otanchatram ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல் பூதிபுரம் ரேஷன் கடையில் கலெக்டர் ஆய்வு