×

மதுராந்தகம் இந்து மேல்நிலை பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

 

மதுராந்தகம், ஜூன் 3: மதுராந்தகம் இந்து மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் நூறு ஆண்டுகளுக்கு மேலாக இந்து மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 1984ம் ஆண்டு 10ம் வகுப்பு மற்றும் 1986 ஆண்டு 12ம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி அப்பள்ளியில் நேற்று நடைபெற்றது.

இதில், கலந்து கொண்ட 40 முன்னாள் மாணவர்கள் பள்ளியை சுற்றிப் பார்த்தும், வகுப்பறையில் அமர்ந்தும், ஆசிரியர்களுடன் கலந்துரையாடி மகிழ்ந்தனர். இதனையடுத்து, பள்ளியில் உள்ள அனைத்து வகுப்பறைகளுக்கும் ரூ.1.20 லட்சம் மதிப்பிலான மின் விசிறிகளை பள்ளி தலைமை ஆசிரியர் பாபுவிடம் வழங்கினர். மேலும் நிகழ்ச்சியில் முன்னாள் ஆசிரியர் ராஜேந்திரனை மாணவர்கள் சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கி கவுரவப்படுத்தினர்.

The post மதுராந்தகம் இந்து மேல்நிலை பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு appeared first on Dinakaran.

Tags : Hindu Higher Secondary School ,Maduranthagam ,Madhurandakam ,Maduraandakam ,Hindu High School ,Madhuranthak, Chengalpattu District ,Madurandagam ,Hindu ,High ,School Alumni ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு மற்றும் சுற்றுவட்டாரப்...