×

மது விற்ற 2 பேர் கைது

 

ஊத்தங்கரை, ஜூன் 3: ஊத்தங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் கந்தவேல் மற்றும் போலீசார், வெப்பாலம்பட்டி அருகே ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அனுமதியின்றி அங்குள்ள பெட்டி கடையில் மது விற்பனை செய்த லட்சுமி (40) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து, 8 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் கல்லாவி போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழரசி, அம்மன் கோயில் பகுதியில், ரோந்து பணி மேற்கொள்ளும் போது அங்குள்ள பெட்டி கடையில் உரிய அனுமதியின்றி மது விற்பனை செய்த 52 வயது நபரை கைது செய்து, 12 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

The post மது விற்ற 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Uthangarai ,Inspector ,Kandavel ,Vebbalambatti ,Lakshmi ,
× RELATED பெட்டிஷன் மேளாவில் 16 மனுக்களுக்கு தீர்வு