×

₹6.25 லட்சத்திற்கு வெற்றிலை விற்பனை

 

கடத்தூர், ஜூன் 3: கடத்தூர் வாரச்சந்தையில் ₹6.25 லட்சத்திற்கு வெற்றிலை விற்பனையானது. வரத்து அதிகரிப்பால் விலை சரிந்தது. ர்மபுரி மாவட்டம் கடத்தூரில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் சந்தை பிரசித்தம். சந்தையில் வெற்றிலை விற்பனை களை கட்டும். நேற்றைய சந்தைக்கு தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மட்டுமின்றி அண்டைய மாவட்டங்களான கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட இடங்களிலிருந்தும் ஏராளமான வியாபாரிகள் வெற்றிலை வாங்குவதற்காக வந்து குவிந்தனர்.

மணியம்பாடி, நல்லகுட்டலஹள்ளி, கோம்பை, அஸ்தகிரியூர், முத்தனூர், கேத்துரெட்டிப்பட்டி, அய்யம்பட்டி, வேப்பிலைப்பட்டி, காவேரிபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதியிலிருந்து வெற்றிலையை விற்பனைக்காக கொண்டு வந்து குவித்தனர். கடந்த வாரம் 128 கட்டுகளைக் கொண்ட ஒரு மூட்டை வெற்றிலைஇ ₹15 ஆயிரம் முதல் ₹27 ஆயிரம் வரை விற்பனையானது. நேற்றைய சந்தையில் ₹15 ஆயிரம் முதல் ₹25 ஆயிரம் வரை விற்பனையானது. வரத்து அதிகரிப்பால், கடந்த வாரத்தை காட்டிலும் ₹2 ஆயிரம் விலை குறைந்தது. தொடர் மழை காரணமாக வெற்றிலைக்கொடி செழித்து வளர்ந்து வருவதால் வரத்து அதிகரித்துள்ளது. நேற்றைய சந்தையில் ₹6.25 லட்சத்திற்கு வெற்றிலை விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

The post ₹6.25 லட்சத்திற்கு வெற்றிலை விற்பனை appeared first on Dinakaran.

Tags : Kadoor ,Prashitham ,Kaduur, Ramapuri District ,Dharmapuri ,Dinakaran ,
× RELATED ஏரியில் மண் அள்ளி கடத்தியவர் கைது