×

வாசகர் வட்ட கூட்டம்

 

தர்மபுரி, ஜூன் 3: தர்மபுரி மாவட்ட மைய நூலகத்தில், வாசகர் வட்ட கூட்டம் நடைபெற்றது. மாவட்ட மைய நூலக வாசகர் வட்டத் தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான டாக்டர் செந்தில் தலைமை வகித்தார். மாவட்ட முதல் நிலை நூலகரும், வாசகர் வட்ட செயலாளருமான மாதேஸ்வரன் வரவேற்றார். கூட்டத்தில் மாவட்ட மைய நூலகத்தில் வாசகர் எண்ணிக்கையை அதிகரிப்பது என முடிவு செய்யப்பட்டது.

போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு போதிய இடவசதிகளை உருவாக்கி கொடுப்பது; நூல் அறிமுக நிகழ்ச்சிகள் நடத்துவது; பள்ளி-கல்லூரி மாணவர்களிடையே வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் மேற்கொள்ளப்பட்டது. கூட்டத்தில் வாசகர் வட்ட உறுப்பினர்கள் கவுன்சிலர் சம்பந்தம், உதவி பேராசிரியர் சிவப்பிரகாசம், தலைமை ஆசிரியர் பழனி, ஆசிரியர் தமிழ்தாசன், 2ம் நிலை நூலகர்கள் சுப்ரமணி, திருநாவுக்கரசு, நூல் கட்டுனர் சரவணன்உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post வாசகர் வட்ட கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Reader's Circle Meeting ,Dharmapuri ,Readers Circle ,Dharmapuri District Central Library ,District Central Library Reader Circle ,President ,Dr. ,Senthil ,District First Level Librarian ,Readers' Circle ,Readers' Circle Meeting ,Dinakaran ,
× RELATED மூதாட்டி திடீர் சாவு