×

நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய சீன விண்கலம்

பீஜிங்: நிலவின் தென் துருவத்தில் சாங் இ 6 என்ற விண்கலத்தை சீனா வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது. தென் துருவத்தில் இருந்து மண் உள்ளிட்ட மாதிரிகளை விண்கலம் எடுக்க உள்ளது. நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக சாங் இ 6 என்ற விண்கலத்தை சீனா ஏவியது. இந்த விண்கலம் பீஜிங் நேரப்படி நேற்று காலை, 6.23க்கு நிலவில் தரையிறங்கியதாக சீனாவின் தேசிய விண்வெளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. எய்ட்கென் பேசின் எனப்படும் பள்ளத்தில் விண்கலம் தரையிறங்கியுள்ளது. நிலவின் மேற்பரப்பில் உள்ள கற்கள், மண் ஆகியவற்றை பூமிக்குக் கொண்டு வந்து ஆராய்ச்சி செய்வதே இத்திட்டத்தின் இலக்கு என்று சீனாவின் விண்வெளி நிர்வாகம் தெரிவித்தது.

நீண்டகால விண்வெளிப் பயணங்கள், விண்வெளி முகாம்கள் ஆகியவை நீடித்து நிலைத்திருக்க அமெரிக்கா உட்பட பல நாடுகள் நிலவில் இருக்கும் தாதுப்பொருள்களைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளன. இந்த வரிசையில் சீனாவும் சேர்ந்துள்ளது. நிலவின் தென் துருவ பகுதியில் முதன் முதலில் இந்தியா சந்திராயன்- 3 விண்கலத்தை கடந்த ஆண்டு வெற்றிகரமாக இறக்கி சாதனை படைத்தது. அதை தொடர்ந்து தற்போது சீனாவும் அந்த பகுதியில் விண்கலத்தை தரையிறக்கியுள்ளது.

 

The post நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய சீன விண்கலம் appeared first on Dinakaran.

Tags : South Pole of the Moon ,Beijing ,China ,South Pole ,Dinakaran ,
× RELATED காதலுக்கு வயது தடையில்லை 80 வயது தாத்தாவை காதலித்து மணந்த 23 வயது இளம்பெண்