×

பஞ்சாப்பில் அமிர்தசரஸ் -டெல்லி ரயில் பாதையில் உள்ள ஃபதேகர் சாஹாப்பியல் 2 ரயில்கள் மோதி விபத்து

பஞ்சாப் மாநிலம் ஃபதேகர் சாஹேப்பி அருகே இன்று அதிகாலை 3.30 மணியளவில் 2 ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சரக்கு ரயிலின் இஞ்சின் தடம் புரண்டு பயணிகள் ரயில் மீது விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 2 லோக்கோ பைலட்டுகள் காயமடைந்துள்ளனர். அவர்கள் மிகவும் மோசமான நிலையில் மருத்துவமனையுஇல் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர்.

விபத்திற்கான காரணங்கள்:
சரக்கு ரயிலுக்காக கட்டப்பட்டுள்ள பாதையில் ஏற்கனவே நிலக்கரி ஏற்றி செல்வதற்காக 2 ரயில் பெட்டிகள் அங்கு நின்றுள்ளது. அதன் எதிர்புரம் சரக்கு ரயிலின் எஞ்சின் மோதியது. உடன் அருகில் நின்றிருந்த பயணிகள் ரயில் மீதி சரக்கு ரயிலின் எஞ்சின் விழுந்துள்ளது விபத்து ஏற்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிர்சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை.

பயணிகள் நின்றுகொண்டிருந்ததால் பெருமளவில் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து சரக்கு ரயிலின் எஞ்சின் அகற்றப்பட்டது. உடன் பயணிகள் ரயிலின் எஞ்சின் மாற்றப்பட்டு பிறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது.

The post பஞ்சாப்பில் அமிர்தசரஸ் -டெல்லி ரயில் பாதையில் உள்ள ஃபதேகர் சாஹாப்பியல் 2 ரயில்கள் மோதி விபத்து appeared first on Dinakaran.

Tags : Fatehar ,Amritsaras-Delhi ,Punjab ,Fatehar Sahepi, Punjab ,Fatehkar Sahapiyal ,Dinakaran ,
× RELATED அமிர்தசரஸ் – டெல்லி ரயில் பாதையில்...