×

உலக சாதனைக்காக சிலம்பம் சுற்றிய மாணவர்களுக்கு சான்றிதழ்: சுந்தர் எம்எல்ஏ வழங்கினார்

காஞ்சிபுரம், ஜூன் 2: காஞ்சிபுரத்தில், உலக சாதனைக்காக கண்களை கட்டிக்கொண்டு சிலம்பம் சுற்றிய மாணவர்களுக்கு உத்திரமேரூர் எம்எல்ஏ க.சுந்தர் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார். காஞ்சிபுரம் அரசு அண்ணா விளையாட்டு அரங்க மைதான வளாகத்தில், மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் 101வது பிறந்தநாளை முன்னிட்டு, அஸ்வின் மார்சியல் ஆர்ட்ஸ் சார்பில் தொடர்ந்து 5 மணி நேரம் கண்களை கட்டிக்கொண்டு சிலம்பம் சுற்றும் உலக சாதனை நிகழ்வு நேற்று நடைபெற்றது.

இதில் காஞ்சிபுரம் எம்பி க.செல்வம், மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ், துணை மேயர் ஆர்.குமரகுருநாதன், மாமன்ற உறுப்பினர் செவிலிமேடு மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிலம்ப பயிற்சியாளர் அஸ்வின் வரவேற்று பேசினார்.இந்த நிகழ்வில் 6 முதல் 25 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் 12 பேர் கண்களை கட்டிக்கொண்டு தொடர்ந்து 5 மணி நேரமும், சில மாணவர்கள் 3 மணி நேரமும் சிலம்பம் சுற்றி சாதனை படைத்தனர். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட உத்தரமேரூர் எம்எல்ஏ க.சுந்தர் சிலம்ப விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகளை வழங்கினார். இந்நிகழ்வில் காஞ்சிபுரம் மாநகர திமுக செயலாளர் சிகேவி தமிழ்ச்செல்வன், மாமன்ற உறுப்பினர்கள், திமுக பகுதி செயலாளர்கள் சந்துரு, தசரதன், வெங்கடேசன், திலகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post உலக சாதனைக்காக சிலம்பம் சுற்றிய மாணவர்களுக்கு சான்றிதழ்: சுந்தர் எம்எல்ஏ வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Sundar MLA ,Kanchipuram ,Kanchipuram, ,Uttaramerur ,MLA ,K. Sundar ,Chief Minister ,M. Karunanidhi ,Kanchipuram Govt. Anna Sports Stadium ,
× RELATED வெளிமாநில வட்டாட்சியர்களை...