×

மாடியில் இருந்து தவறி விழுந்து பெயின்டர் பலி

நெல்லை,ஜூன் 2: நெல்லை அருகே பணியில் இருந்த தூத்துக்குடி பெயின்டர் தவறி விழுந்து பலியானார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்தவர் மரிய தனிஸ்லாஸ்(46). பெயின்டர். இவர் கடந்த 29ம்தேதியன்று வள்ளியூர் எஸ்கேபி நகரில் உள்ள பழனி என்பவரது வீட்டின் மாடியில் பெயின்டிங் வேலையில் ஈடுபட்டிருந்தார். அப்போது முதல் மாடியில் இருந்து அவர் தவறி விழுந்தார். இதில் பலத்த அடிபட்ட அவர் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவர் இறந்தார். இது குறித்து வள்ளியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மாடியில் இருந்து தவறி விழுந்து பெயின்டர் பலி appeared first on Dinakaran.

Tags : Nellai ,Tuticorin ,Maria Tanislaus ,Satankulam, Tuticorin district ,Palani ,Valliyur SKB Nagar ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடி அருகே புதுக்கோட்டையில்...