×

உவரி அருகே கார்-பைக் மோதி ஒருவர் பலி: 3 பேர் படுகாயம்

திசையன்விளை, ஜூன் 2: உவரி அருகே காரின் முன் பக்கம் டயர் வெடித்தது காரணமாக பைக்கும், காரும் மோதிக்கொண்டதில் ஒருவர் பலியானார். 3 பேர் படுகாயமடைந்தனர். நாகர்கோவில் வடசேரி அருகேயுள்ள கிருஷ்ணன் கோயில் பகுதியை சேர்ந்தவர் குமாரவேல் (65), அவரது நண்பர்  (64) ஆகியோர் நாகர்கோவிலிருந்து உவரி வழியாக திருச்செந்தூருக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அதே நேரத்தில் பொள்ளாச்சியிலிருந்து காரில் சிவபிரகாசம் (49) மற்றும் அவரது குடும்பத்தினர் உட்பட 6 பேர் கன்னியாகுமரி சென்று விட்டு திருச்செந்தூருக்கு சென்று கொண்டிருந்தனர். உவரி அருகே கார் வந்து கொண்டிருந்த போது காரின் முன் பக்கம் டயர் திடீரென வெடித்தது. இதன் காரணமாக காரும், பைக்கும் பக்கவாட்டில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த நாகர்கோவிலை சேர்ந்த குமாரவேல்,  மற்றும் பொள்ளாச்சியிலிருந்து வந்த டிரைவர் மணி, (49), சிவபிரகாசம் ஆகிய 4 பேரையும் அங்கு வந்த உவரி போலீசார், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மீட்டு திசையன்விளை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக குமாரவேல் நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதுகுறித்து உவரி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post உவரி அருகே கார்-பைக் மோதி ஒருவர் பலி: 3 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Uvari ,Vektionvilai ,Kumaravel ,Krishnan Koil ,Vadaseri ,Nagercoil ,Dinakaran ,
× RELATED நெல்லை அருகே பைக்குகள் மோதி பள்ளி மாணவர் பலி: இருவர் காயம்