×

கூட்டுறவு சங்க செயலருக்கு பணி நிறைவு பாராட்டு விழா

காரிமங்கலம், ஜூன் 2: காரிமங்கலம் ஒன்றியம், பேகாரஅள்ளி கூட்டுறவு சங்க செயலாளராக பணியாற்றிய ரவி ஓய்வு பெற்றார். இதையடுத்து, பணி நிறைவு பாராட்டு விழா கூட்டுறவு சங்க வளாகத்தில் நடைபெற்றது. அவருக்கு சங்க அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பொன்னாடை அணிவித்து, நினைவு பரிசு வழங்கினர். நிகழ்ச்சியில் செயல் ஆட்சியர் சந்தியா, துணை செயலாளர் முருகேசன், முன்னாள் சங்கத் தலைவர் பொண்ணுவேல், பிடிஏ தலைவர் ஜீவாகிருஷ்ணன், ஒன்றிய கவுன்சிலர் மாது, முன்னாள் கவுன்சிலர் நாகராஜ், தனபால், சந்திரன், வையாபுரி, பட்டு, சிரஞ்சீவி, குணசுந்தரி, ஸ்ரீராமுலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post கூட்டுறவு சங்க செயலருக்கு பணி நிறைவு பாராட்டு விழா appeared first on Dinakaran.

Tags : Cooperative Society ,Karimangalam ,Ravi ,Bekharaalli Cooperative Society ,Karimangalam Union ,
× RELATED பயனாளர்களை ஏமாற்றி கையெழுத்து பெற்று...