×

ஏரியில் மண் அள்ளி கடத்தியவர் கைது

கடத்தூர், ஜூன் 2: தர்மபுரி மாவட்டம், கடத்தூர் அருகே கேத்துரெட்டிபட்டி ஏரியில் உரிய அனுமதியின்றி மண் அள்ளுவதாக வருவாய்த்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், கிராம நிர்வாக அலுவலர் குமார் மற்றும் உதவியாளர் கற்பகம் ஆகியோர் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினர். அவர்களை கண்டதும் ஏரியில் டிராக்டரில் மண் அள்ளிக்கொண்டிருந்தவர்கள் ஓட்டம் பிடித்தனர். அவர்களில் சசிகுமார்(41) என்பவரை மடக்கி பிடித்து, கடத்தூர் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். எஸ்ஐ புவனேஸ்வரி விசாரித்து சசிகுமாரை கைது செய்தார். அவரிடமிருந்து மண் பாரத்துடன் 2 டிராக்டர் கைப்பற்றப்பட்டது. மேலும், தப்பி ஓடிய ரங்கநாதன் என்பவரை தேடி வருகின்றனர்.

The post ஏரியில் மண் அள்ளி கடத்தியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Kadoor ,Kethurettipatti lake ,Kadoor, Dharmapuri district ,Village Administrative Officer ,Kumar ,Assistant ,Karpagam ,Dinakaran ,
× RELATED ₹6.25 லட்சத்திற்கு வெற்றிலை விற்பனை