×

வாக்கு எண்ணிக்கை நாளில் டாஸ்மாக் மூடல்

மதுரை, ஜூன் 2: மதுரை கலெக்டர் சங்கீதா வெளியிட்டுள்ள அறிக்கை: நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் 4ம் தேதி நடக்கிறது. இதையொட்டி, மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்து இயங்கும் அனைத்து மதுக்கூடங்கள், எப்எல் 2 முதல் எப்எல் 11 வரையிலான பார்கள் (எப்எல் 6 நீங்கலாக) அனைத்தும் வாக்கு எண்ணிக்கை நாளன்று காலை 10 மணி முதல் இரவு 12 மணி வரை மதுபான விற்பனை நடக்காது. அன்றைய தினம் இவை அனைத்தும் மூடப்பட்டிருக்கும். அன்றைய தினங்களில் மதுபானங்களை விற்பனை செய்வதையும், வேறு இடங்களுக்கு கொண்டு செல்வதையும் தவிர்க்க வேண்டும். மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூறியுள்ளார்.

The post வாக்கு எண்ணிக்கை நாளில் டாஸ்மாக் மூடல் appeared first on Dinakaran.

Tags : Tasmac ,Madurai ,Collector ,Sangeetha ,Tasmak ,Dinakaran ,
× RELATED மஞ்சாலுமூடு டாஸ்மாக் கடையில் சிறுமிக்கு மது வாங்கி கொடுத்த தாய்