×

பேரையூர் அருகே திறந்தவெளி கிணற்றால் ஆபத்து

பேரையூர், ஜூன் 2: பேரையூர் அருகே முத்துலிங்காபுரம் ஊராட்சிக்கு உட்பட்டது கொண்டுரெட்டிபட்டி. இந்த ஊர் பொதுமந்தை, கோவில், அங்கன்வாடி, பள்ளிக்கூடம் உள்ளிட்ட பகுதியின் நடுவே திறந்த வெளியில் கிணறு உள்ளது. ஆழமான இந்த கிணற்றில் சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக தற்போது கிணற்றில் அதிகமானத் தண்ணீரும் உள்ளது. குழந்தைகள் எட்டிப்பார்க்கும் அளவில் உள்ள இந்தக் கிணற்றில் அதிகம் நடமாடும் பள்ளி குழந்தைகள் தவறி விழும் பேராபத்து உள்ளது. இதுகுறித்து கொண்டு ரெட்டிபட்டி கிராமமக்கள் கிணற்றை வலையால் மூடவேண்டும் என ஊராட்சி நிர்வாகத்திடம் பல ஆண்டுகளாக முறையிட்டு வருகின்றனர். ஆனால் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதுகுறித்து பேரிடர் பணியாக ஊராட்சி நிர்வாகம் செய்து தர மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பேரையூர் அருகே திறந்தவெளி கிணற்றால் ஆபத்து appeared first on Dinakaran.

Tags : Beraiyur ,Konrettipatti ,Muthulingapuram ,Anganwadi ,Dinakaran ,
× RELATED சகதியில் வழுக்கி விழுந்து இளம்பெண் பரிதாப சாவு