×

குமுளி அருகே குடியிருப்பு பகுதியில் காட்டெருமைகள் உலா பொதுமக்கள் அச்சம்

 

கூடலூர், ஜூன் 2: குமுளி அருகே, பீர்மேடு குடியிருப்பு பகுதியில் காட்டு எருமைகளின் நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். குமுளி அருகே உள்ள பீர்மேடு, கரடிக்குழி குரிசுமொட்டை குடியிருப்பு பகுதிக்குள் கடந்த சில நாட்களாக காட்டு எருமைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குடியிருப்பு பகுதிக்குள் காட்டெருமைகள் நடமாட்டத்தால் இப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

மேலும் காட்டெருமைகளுக்கு பயந்து பகல் நேரத்திலும் சாலையில் நடமாட அச்சப்படுகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பாம்பனாறு பகுதியிலும் காட்டெருமைகள் நடமாட்டத்தை அப்பகுதி மக்கள் கண்டிருந்தனர்.
வனத்துறையினர் அவற்றை வனப்பகுதிக்குள் விரட்டினாலும், மீண்டும் வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். எனவே குடியிருப்புவாசிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில், காட்டு எருமைகளை நிரந்தரமாக வனப்பகுதிக்குள் கொண்டு சேர்க்க வனத்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post குமுளி அருகே குடியிருப்பு பகுதியில் காட்டெருமைகள் உலா பொதுமக்கள் அச்சம் appeared first on Dinakaran.

Tags : Kumuli ,Koodalur ,Beermedu ,Karadikuzhi Kurizumottai ,
× RELATED கனமழையால் சிற்றாற்றில்...