×

வேன் மோதி ஓட்டல் உரிமையாளர் பலி

 

திருப்புத்தூர், ஜூன் 2: திருப்புத்தூர் அருகே சேவினிப்பட்டியை சேர்ந்தவர் ஆண்டியப்பன் (52). இவர் கீழச்சிவல்பட்டி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் ஓட்டல் வைத்து நடத்தி வந்தார். இந்நிலையில் நேற்று மதியம் ஓட்டலில் சமைப்பதற்காக கீழச்சிவல்பட்டிக்கு சென்று விறகு வாங்கி கண்டு டூவீலரில் வந்துள்ளார். ஓட்டல் அருகே வந்தவுடன் சாலையில் திரும்பும் போது பின்னே வந்த வேன் இவரது டூவீலர் மீது மோதியது.

இதில் படுகாயமடைந்த ஆண்டியப்பன் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த கீழச்சீவல்பட்டி போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்புத்தூர் ஜிஹெச்சிற்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து எஸ்ஐ ராஜ்குமார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

The post வேன் மோதி ஓட்டல் உரிமையாளர் பலி appeared first on Dinakaran.

Tags : Tiruputhur ,Antiyappan ,Savenipatti ,Keezhachivalpatti National Highway ,Keezachivalpatti ,
× RELATED பட்டமளிப்பு விழா