×

ஏர்வாடி, வாலிநோக்கம் பகுதிகளில் மலேரியா காய்ச்சல் ெகாசு ஒழிப்பு பணி தீவிரம்

 

சாயல்குடி, ஜூன் 2: கடலாடி வட்டாரத்தில் உள்ள வாலிநோக்கம், ஏர்வாடி பகுதிகளில் மலேரியா காய்ச்சலை பரப்பும் கொசுக்களை முற்றிலும் ஒழிக்க பரமக்குடி சுகாதார மாவட்ட அலுவலகம் சார்பில் தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்பு வருடத்திற்கு 2 முறை வீடு வீடாக சென்று கொசு மருந்து தெளிப்பான்கள் மூலம் தெளிக்கப்படுகிறது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் உத்தரவின்படி பரமக்குடி சுகாதார மாவட்ட அலுவலர் இந்திரா அறிவுறுத்தலின் பேரில் நேற்று வாலிநோக்கம், சின்ன ஏர்வாடி பகுதிகளில் கொசு மருந்து தெளிக்கும் பணி மாவட்ட மலேரியா அலுவலர் ரமேஷ் முன்னிலையில் நடந்தது. 30 நாட்கள் நடைபெறும் இந்த கொசு மருந்து தெளிப்பு பணியில் 30 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளளனர்.

இவர்களோடு இணைந்து டெங்கு கொசு புழு ஒழிப்பு பணியாளர்கள் வீடு வீடாக சென்று தண்ணீரில் வளரும் கொசு புழுக்களை அபேட் மருந்துகள் ஊற்றி அழிக்கும் பணியும் நடைபெறுகிறது. இப்பணிகளை விருதுநகர் மண்டல பூச்சியியல் வல்லுநர் வரதராஜன் நேரில் ஆய்வு செய்தார். இதில் இளநிலை பூச்சியியல் வல்லுநர்கள் பாலசுப்பிரமணியன், மணிகண்டன், கடலாடி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பூமிநாதன், சுகாதார ஆய்வாளர்கள் செல்லத்துரை, ராஜசேகர், சுப்பிரமணியன்,பாலமுருகன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

The post ஏர்வாடி, வாலிநோக்கம் பகுதிகளில் மலேரியா காய்ச்சல் ெகாசு ஒழிப்பு பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Airwadi ,Valinokkam ,Sayalkudi ,Paramakudi Health District Office ,Cuddaly ,
× RELATED பாஜ கொடி கட்டிய ஜீப் மோதி 3 பேர் பலி