×

பள்ளங்கோயில் கிராமத்தை அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டும் முத்துப்பேட்டையில் சொத்து தகராறில் தம்பியை வெட்டிய அக்கா கைது

 

முத்துப்பேட்டை, ஜூன் 2: முத்துப்பேட்டை கல்கேணி தெருவை சேர்ந்தவர் கமால் பாட்சா மகன் லெப்பை தம்பி மரைக்காயர் (46) என்பவருக்கும், அவரது உடன் பிறந்த சகோதரி (அக்கா) ஹபீபு நிஷா(47) என்பவருக்கு நீண்ட காலமாக சொத்து தகராறு இருந்து வந்தது.இதனால் அடிக்கடி இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு லெப்பை தம்பி மரைக்காயர் வீட்டுக்கு சென்றபோது அவரது சகோதரி ஹபீபு நிஷா மறித்து கட்டையால் தாக்கியதுடன் அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது.

இதில் தலை மற்றும் பல இடங்களில் காயம் அடைந்த அவர் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து லெப்பை தம்பி மரைக்காயர் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் கழனியப்பன் மற்றும் போலீசார் தம்பியை அரிவாளால் வெட்டிய அக்கா ஹபீபு நிஷாவை கைது செய்து திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.
இதேபோல அவரது தந்தை கமால்பாட்சா தனது மகள் ஹபீபு நிஷாவை தனது மகன் லெப்பை தம்பி மரைக்காயர் தாக்கியதாக கொடுத்த புகரில் பேரில் லெப்பை தம்பி மரைக்காயர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்த போலீசார் தீவிர விசாரணக்கு பின்னர் அவரை காவல் நிலையம் பிணையில் விடுவித்தனர்.

The post பள்ளங்கோயில் கிராமத்தை அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டும் முத்துப்பேட்டையில் சொத்து தகராறில் தம்பியை வெட்டிய அக்கா கைது appeared first on Dinakaran.

Tags : Pallangoil ,Muthupettai ,Muthuppet ,Kamal Bacha ,Leppai Thambi Maraikayar ,Habibu Nisha ,Kalkeni Street, Muthupet ,Muthupet ,
× RELATED முத்துப்பேட்டை ஈசிஆர் சாலையில் கண்களுக்கு விருந்தளித்த கொண்றை பூக்கள்