×

திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம்

 

தஞ்சாவூர், ஜூன் 2: கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு தஞ்சாவூர் கலைஞர் அறிவாலயத்தில் மத்திய மாவட்ட மாநகர திமுக இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் நடந்தது. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் முகில் வேந்தன் வரவேற்றார். தஞ்சாவூர் எம்எல்ஏ டிகேஜி நீலமேகம், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ராமச்சந்திரன், செல்வம், மாநில இளைஞரணி துணை செயலாளர் இளையராஜா, தஞ்சை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் முரசொலி, மாநகர செயலாளரும், தஞ்சாவூர் மேயருமான சண்.ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கலைஞர் என்றும் இளைஞராய்’ என்ற தலைப்பில் திமுக மாணவரணி தலைவர் ராஜிவ்காந்தி, திமுக செய்தி தொடர்பாளர் சூர்யா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பேசினர். மாநில மருத்துவர் அணி துணை செயலாளரும், மாநகராட்சி துணை மேருமான மருத்துவர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட துணை செயலாளர் கனகவல்லி பாலாஜி மற்றும் பலர் கலந்து கொண்டனர். மாநகர இளைஞரணி அமைப்பாளர் வாசிம்ராஜா நன்றி கூறினார்.

The post திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Dravida Model Training Workshop ,Thanjavur ,Dravida model ,Thanjavur Artist Institute ,Central District Metropolitan DMK Youth ,Mukil Vendan ,Dravida model training ,Dinakaran ,
× RELATED வெளிநாட்டுக்கு ஆட்கள் அனுப்புவதாக...