×

சனிதோறும் புதுக்கோட்டை வடக்கு மாவட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை திமுகவினர் சிறப்பாக கொண்டாடுங்கள்

 

புதுக்கோட்டை, ஜூன் 2: முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழாவை, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதல்களோடு புதுக்கோட்டை வடக்கு மாவட்டம் முழுவதும் எழுச்சியோடு கொண்டாடுவோம் என புதுக்கோட்டை வடக்கு மாவட்டச் செயலாளர் கே.கே.செல்லப்பாண்டியன் அழைப்பு விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: “உலகம் முழுவதிலும் தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழ்வதற்கும், மூத்த மொழியாம் தமிழ்மொழி செம்மொழி தகுதியைப்பெற்று இன்று பட்டொளி வீசி பறப்பதற்கும் காரணமாயிருந்த முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவை தலைமைக்கழகத்தின் வழிகாட்டுதல்களோடு கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா ஜூன் 3ம் தேதி முதல் எழுச்சியோடு கொண்டாடப்படவிருக்கிறது உலகத்தலைவர்களில் தாம் போட்டியிட்ட இடங்களிலெல்லாம் வெற்றி பெற்ற ஒரே தலைவராய் , தமிழ்நாட்டை செதுக்கிய சிற்பியாய் திகழும், ஒப்பாரும் மிக்காரும் இல்லா தலைவராம் கலைஞர் அவர்கள், தமது 14ம் வயதில், திருவாரூரில் தொடங்கிய பொதுவாழ்வு பயணத்தில், எத்தனையோ சாதனைகளை படைத்து உயர்ந்து இருந்திருக்கிறார்.

அப்படிப்பட்ட அந்த மகத்தான தலைவரின் 101-வது பிறந்தநாளை, கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவை புதுக்கோட்டை வடக்கு மாவட்டம் முழுவதிலும் மாவட்ட, ஒன்றிய ,நகர, பேரூர், கிளை மற்றும் வார்டுகள், கழகங்கள் தோறும் கழக கொடி ஏற்றியும் , பொதுமக்களுக்கு இனிப்புக்கள் வழங்கியும் சிறப்போடு கொண்டாடுவதோடு, ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் , மாணவ மாணவிகளுக்கு கல்வி கற்க உதவிகள் வழங்குதல் , விளையாட்டுப்போட்டிகள் , இலக்கிய போட்டிகளை நடத்துதல் போன்ற பல்வேறு நிகழ்வுகளை, இந்த வருடம் முழுவதும் நடத்தி கலைஞர் எனும் மாமனிதரின் புகழ் பாடுவோம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

The post சனிதோறும் புதுக்கோட்டை வடக்கு மாவட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை திமுகவினர் சிறப்பாக கொண்டாடுங்கள் appeared first on Dinakaran.

Tags : Artist Centenary Festival ,Sanidorum Pudukkottai Northern District ,Pudukkottai ,Centennial Completion Ceremony ,Muthamil Scholar ,Tamil Nadu ,MLA ,K. ,Pudukkottai Northern District ,K. K. Cellpandian ,Thimugvinar ,Artist Centennial Celebration ,
× RELATED ராஜா அண்ணாமலை மன்றத்தில் நாளை காலை கலைஞர் நூற்றாண்டு நிறைவு