×

தோல்வி பயத்தில் 150 கலெக்டர்களை அமித்ஷா மிரட்டுகிறார்: காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுடெல்லி: காங்கிரஸ் பொதுசெயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தன் ட்விட்டர் பதிவில், ‘பதவி விலகும் உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு தேர்தல் அதிகாரிகள், கலெக்டர்களை அழைத்து வருகிறார். இதுவரை அவர் 150 கலெக்டர்களிடம் பேசியுள்ளார். இது அப்பட்டமான, வெட்கக்கேடான மிரட்டல். பாஜ எவ்வளவு அவநம்பிக்கையில் உள்ளது என்பதை இது காட்டுகிறது.

மிகத் தெளிவாக இருக்கட்டும்: மக்களின் விருப்பம் வெல்லும், ஜூன் 4ம் தேதி, மோடி, அமித்ஷா மற்றும் பா.ஜ வெளியேறுவார்கள். இந்தியா கூட்டணி வெற்றி பெறும். அதிகாரிகள் எந்த அழுத்தத்திற்கும் ஆளாகாமல் அரசியல் சாசனத்தை நிலைநாட்ட வேண்டும். அவர்கள் அனைவரும் கண்காணிப்பில் உள்ளனர்’ என்று குறிப்பிட்டுஉள்ளார்.

The post தோல்வி பயத்தில் 150 கலெக்டர்களை அமித்ஷா மிரட்டுகிறார்: காங்கிரஸ் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Amit Shah ,Congress ,New Delhi ,General Secretary ,Jairam Ramesh ,Minister ,Dinakaran ,
× RELATED தமிழிசை சவுந்திரராஜனை பெண் என்றும்...