×

கேரளாவில் முடிவுகளை உடனே அறிய புதிய வசதி

திருவனந்தபுரம்: கேரளா தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சய் கவுல் கூறியிருப்பது: மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகளை ஊடகங்களும், பொதுமக்களும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள முதன் முதலாக ஒருங்கிணைந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இணையதளத்திலும், வாக்காளர் ஹெல்ப் லைன் செயலியிலும் உடனுக்குடன் முடிவுகள் கிடைக்கும். நாடு முழுவதும் உள்ள அனைத்து தொகுதிகளின் முடிவுகளும் ஒருங்கிணைந்த முறையில் வெளியிடப்படுவது இதுவே முதல் முறையாகும். வாக்காளர் ஹெல்ப் லைன் செயலியில் முகப்பு பக்கத்தில் உள்ள தேர்தல் முடிவுகள் மெனுவை கிளிக் செய்தால் வாக்கு எண்ணிக்கை விவரங்கள் உடனுக்குடன் கிடைக்கும். வாக்காளர் ஹெல்ப் லைன் செயலியை கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

The post கேரளாவில் முடிவுகளை உடனே அறிய புதிய வசதி appeared first on Dinakaran.

Tags : Kerala ,Thiruvananthapuram ,Chief Electoral Officer ,Sanjay Kaul ,Lok Sabha ,Election Commission ,Dinakaran ,
× RELATED நீட் தேர்வுக்கு எதிராக கேரளாவில் போராட்டம்..!!