×

வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணி தேர்தல் அலுவலர் நேரில் ஆய்வு அதிக வெப்ப காற்று வீசிய நிலையில் மாலை நேரத்தில் லேசான மழை

 

கரூர், ஜூன் 2: கரூர் மாவட்டத்தில் நேற்று பகல் முழுவதும் கடுமையான உருக்கமும், வெப்பமும் இருந்தது. வெயில் குறைவாக இருந்த போதிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. வழக்கத்தை விட நேற்று பொதுமக்கள் அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. கரூர் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கு முன்மாக பல்வேறு இடங்களில் கன மழை பெய்து. வெயில் தாக்கம் கொஞ்சம் கூட இல்லாமல் இருந்தது. அக்னி வெயிலின் தாக்கம் காணாமல் போனது.

இந்நிலையில் நேற்று வெப்பம் வாட்டி வதைத்தது. மாலை நேரத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதி லேசான மழை பெய்து. இன்று தமிழ்நாட்டில் அதிக வெயில் அடிக்கும் மாவட்டங்களில் முதன்மையான மாவட்டமாக கடந்த 15 ஆண்டுகளாக விளங்கி வருகிறது. இதனடிப்படையில் கரூர் மாவட்டத்தை பொறுத்த வரை பெரும்பாலான ஆண்டுகளில் கத்தரி வெயில் சீசனிலும் ஓரளவு மழை பெய்து பொதுமக்களை குளிரச் செய்துள்ளது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணி தேர்தல் அலுவலர் நேரில் ஆய்வு அதிக வெப்ப காற்று வீசிய நிலையில் மாலை நேரத்தில் லேசான மழை appeared first on Dinakaran.

Tags : Karur ,Karur district ,Vote Counting Center ,Dinakaran ,
× RELATED 1 முதல் 12ம் வகுப்பு வரை 76 ஆயிரம் பேருக்கு விலையில்லா பாடநூல்