×

400 இடங்களில் பாஜ வெற்றி பெறும் 3வது முறையாக மோடி பிரதமராவார்: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் நம்பிக்கை

தூத்துக்குடி: மக்களவை தேர்தலில் 400க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜ வெற்றி பெற்று 3வது முறையாக மோடி பிரதமராவார் என்று ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் கூறினார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசனம் செய்வதற்காக ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். விமான நிலையத்தில் அவர், நிருபர்களிடம் கூறுகையில்,‘இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சி, கடந்த 10 ஆண்டுகளில் முன்னேற்றம் அடைந்து தற்போது 5வது இடத்தில் உள்ளது.

வரும் 2027ல் நாடு பொருளாதாரத்தில் 3வது இடத்தை அடைந்து விடும். இதற்கு அடையாளமாகத் தான் தற்போது நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. தற்போதைய மக்களவை தேர்தலில் பாஜ 400க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜ வெற்றி பெற்று நரேந்திர மோடி 3வது முறையாக பிரதமராக வருவார். தமிழகத்தில் இரட்டை இலக்கத்தில் பாஜ வெற்றி பெறும்,’ என்றார்.

 

The post 400 இடங்களில் பாஜ வெற்றி பெறும் 3வது முறையாக மோடி பிரதமராவார்: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் நம்பிக்கை appeared first on Dinakaran.

Tags : BJP ,Modi ,Union Minister ,L. Murugan ,Lok Sabha elections ,Union Minister of State ,Chennai ,Tiruchendur Subramania Swamy Temple ,
× RELATED ஒன்றிய அமைச்சர் பதவிக்காக டெல்லியில்...