×

வாக்கு எண்ணிக்கையின் போது திமுக முகவர்கள் கவனமுடன் பணியாற்ற வேண்டும்: ஆர்.எஸ்.பாரதி தலைமையிலான கூட்டத்தில் அறிவுரை

சென்னை: வாக்கு எண்ணிக்கையின் போது திமுக முகவர்கள் மிக கவனமுடன் பணியாற்ற வேண்டும் என்று ஆர்.எஸ்.பாரதி தலைமையிலான மூத்த நிர்வாகிகள் அறிவுரை வழங்கினர். நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்து, ஜூன் 4ம்தேதி வாக்குகள் எண்ணப்படுகிறது. இந்நிலையில், திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் நேற்று காலை 11 மணிக்கு மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமை வகித்தார். அவருடன், அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, திமுக செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது அவர்கள் காணொலி மூலம் மாவட்ட செயலாளர்கள், வேட்பாளர்கள், தலைமை முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினர். இதில், வாக்கு எண்ணிக்கையின் போது, மையத்தில் திமுக முகவர்கள் மிக கவனமாக பணியாற்ற வேண்டும். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும், அங்கு கடைப்பிடிக்க வேண்டிய செயல்முறைகள் என்பன போன்ற பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. வாக்கு எண்ணிக்கை மையங்களில் பிரச்னைகள் ஏற்பட்டால் சட்ட ரீதியாக அணுகுவது குறித்து சட்டத்துறை பிரிவு சார்பில் வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோவும் ஆலோசனைகள் வழங்கினார். அத்தோடு, ஜூன் 3ம் தேதி தலைவர் கலைஞரின் பிறந்த நாளை, மாநிலம் முழுவதும் சிறப்பாக கொண்டாடுவது பற்றியும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

 

The post வாக்கு எண்ணிக்கையின் போது திமுக முகவர்கள் கவனமுடன் பணியாற்ற வேண்டும்: ஆர்.எஸ்.பாரதி தலைமையிலான கூட்டத்தில் அறிவுரை appeared first on Dinakaran.

Tags : DMK ,RS Bharti ,CHENNAI ,RS Bharati ,RS ,Bharati ,Dinakaran ,
× RELATED பாஜவுடன் கூட்டணி வைக்கவே அதிமுக...