×

இந்திய – இலங்கை கடல் எல்லையில் ஹோவர்கிராப்ட் கப்பலில் சென்று ஒன்றிய இணை அமைச்சர் ஆய்வு

மண்டபம்: ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி அருகே அரிச்சல்முனை கடலோர பகுதியில் இன்று சர்வதேச யோகா தினம் நடைபெறுகிறது. இந்திய கடற்படை சார்பில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஒன்றிய பாதுகாப்பு துறை இணை அமைச்சர் சஞ்சய் சேத், ராணுவ ஹெலிகாப்டரில் உச்சிப்புளி அருகே அமைந்துள்ள ஐ.என்.எஸ் பருந்து கடற்படை முகாமிற்கு நேற்று மாலை வந்தார்.  பின்னர் ஹோவர் கிராப்ட் கப்பல் மூலம் இந்திய-இலங்கை சர்வதேச கடலோரப் பகுதியில் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்தார்.

The post இந்திய – இலங்கை கடல் எல்லையில் ஹோவர்கிராப்ட் கப்பலில் சென்று ஒன்றிய இணை அமைச்சர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Union Minister of State ,India-Sri Lanka ,International Yoga Day ,Arichalmunya ,Dhanushkodi ,Rameswaram ,Union Minister of State for Defense ,Sanjay Seth ,Indian Navy ,
× RELATED பணம் தந்தால்தான் திறப்பு...