×

நிலக்கோட்டை அருகே ஆதார் கார்டுடன் அம்மனுக்கு பேனர்: கோயில் திருவிழாவில் சுவாரஸ்யம்

நிலக்கோட்டை: நிலக்கோட்டை அருகே திருவிழாவையொட்டி அம்மனுக்கு ஆதார் கார்டுடன் அச்சடித்து வைக்கப்பட்டிருந்த பேனர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே பொம்மனம்பட்டி கிராமத்தில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான காளியம்மன், பகவதியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் கடந்த வாரம் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று அம்மன் பூங்கரகத்தில் எழுந்தருளி தாரை, தப்பட்டை வாணவேடிக்கைகள் முழங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் ஊர்வலமாக வந்து அருள் பாலித்தார். தொடர்ந்து ஏராளமான பெண்கள் மாவிளக்கு, தீச்சட்டி, பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இத்திருவிழாவில் அம்மனுக்கு ஆதார் கார்டுடன் அச்சடித்து வைக்கப்பட்டிருந்த பேனர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இத்திருவிழாவிற்கு சென்னை, மதுரை, கோவை,தேனி, நெல்லை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். அம்மனுக்கு ஆதார் கார்டுடன் பேனர் வைக்கப்பட்டிருந்தது அங்கு வந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

The post நிலக்கோட்டை அருகே ஆதார் கார்டுடன் அம்மனுக்கு பேனர்: கோயில் திருவிழாவில் சுவாரஸ்யம் appeared first on Dinakaran.

Tags : Amman ,asphalt ,Nilakkot ,Kaliamman ,Bhagavatiamman Temple ,Bommanampatty village ,Godairood, Dindigul district ,Asphalt: ,in Temple Festival ,Dinakaran ,
× RELATED முப்பந்தல் ஆலமூடு அம்மன் கோயிலில் காப்பு கட்டும் நிகழ்ச்சி